சோதனைச்சொற்றொடர்- Tesxt
சுஜாதாதான் முதலிலே "Avoid blogs, they are endless ego trips" என்று சொல்லினார் என்று அவருக்கு அந்தப் பெருமையைக் கொடுக்க என் ஈகோ விடவில்லை. ஆதலால், நான்ன்ன்ன்னேதான் முதன் முதலிலே என் பதிவின் நெத்தியிலே "not a weblog, but an optimized ego-engine" என்று எழுதிக்கொண்டேன் என்பதை இத்தால் என் ஈகோவுடன் அறியத்தருக்கிறேன். இது குறித்துச் சில பொறாமைக்காரர்கள், சுஜாதா சொன்னதனாலேயே இந்த ஈகோவுக்கே ஒரு மதிப்பு வந்து என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தக்கணகணப்பிலே நான் குளிர்விலக்கமுயல்கிறேன் என்று குற்றம் சொல்லமுனைவார்கள்; குறைந்த பட்சம், பெரியமனதுடன் பரிதாபத்துக்குரியவன் என்று பெரியமனது பண்ணி மன்னித்துவிட்டுப்போகும் இந்த விசாரமனதுக் கார மாகாத்து மாக்களின் பாதாளவிந்தைகளுக்கு இந்தப்படிவினைக் கோணிக்கையாக்குகிறேன்.
அதனால், இந்த முக்கிய தரம் வாய்ந்த பதிவுக்கு நிறையப்பின்னூட்டங்கள் தந்து என்னை அவை முந்தி(ரி)யிருக்கச் செயல் தோழர்களது கடை_மையாகும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
தொடர்ந்து படங்களே போட்டு தமிழ் எழுத மறந்து போய்விட்டதால், பழக்கப்படுத்த சில பந்திகளையும் போட்டுவைப்பது நல்லது என்று நண்பர்கள் சிலர் அபிப்பிராயம் தெரிவித்திருப்பதால், போட்டிருக்கிறேன்.
நடமிடும் பூனை
பூமி, சூரியன், சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டிலே வந்து, நிழல் விழுந்து கிரகணம் தோன்றுகிறமாதிரித்தான், விசர்ச்சடையனுக்கு எழுத முடுக்குவதும். கொஞ்சம் மழைத்தூறல், பின்னிரவு, குவிந்த மேசைவிளக்கு, சூடான தேநீர், மெல்லிய பழைய பாடல் (மொழி முக்கியமில்லை) இத்தனையுங்கூடி, மிகவும் முக்கியமான குட்டிச்சடையன் நித்திரையாகவும் இருக்கவேண்டும். விசர்ச்சடையனின் இன்றைய நாளுக்கான கேடு அதுவாகிப்போனது. ஏற்கனவே விசர்ச்சடையனின் அண்மைய நாட்கள் சிலாகித்துச் சொல்லுமளவுக்குச் சிறப்பானதாக இருப்பதாகத் தெரியவில்லை. தெரியாமல், விசர்ச்சடை சின்முத்திரையையே தொடர்ந்து காட்டிவருவதாகத் மொட்டைத்தலைத்தெருமடங்கள் & ஞானபீட்ரம்கள் குற்றஞ் சொல்லிக்கொண்டிருக்கின்றன. சின் என்பது ஆங்கிலத்திலே என்பதையும் இவ்விடத்திலே பாவியாகிய விசர்ச்சடையன் குறிப்பது முக்கியமானது என்பதையுங் காண்க. விசர்ச்சடையனுக்குமட்டுமல்ல இந்நிலை; இன்னும் பல ஸ்ரீலஸ்ரீ கிழட்டுச்சடையர், குட்டிச்சடையர், திரிசடையர் எல்லோருக்குமே இதே "ஸ்பானிஷ் இன்குவிஸிஸன்"தான்; என்ன, இவனுக்கு விசர்ச்சடை, கிழட்டுச்சடையருக்கு, ஒற்றைப்பூ & திரிசடையருக்கு இரட்டைச்சடை என்பதாகக் சின்முத்திரை மாறும். இதைப் பற்றி, மடங்கள், பீடங்களின் வண்டவாளங்களை இழுத்துப் பிய்த்து உதறி எழுதி ஏற்கனவே தன் நெத்தியிலேயே ஒட்டிக்கொண்ட, "கூர்மைப்படுத்தப்பட்ட என்சடை எந்திரம்" என்பதை நிரூபிக்க ஆசை. ஆனால், மொட்டைகளின் சீடப்பிள்ளைகளுக்குச் சொல்லும் தொனிதான் முக்கியமாக்கும், சொல்லும் கருத்தில்லை. "குரலை எழுப்பினால், குற்றம் உனதே" என்பதாகச் சொல்லிக்கொள்ளும் வகை
"முழுமொட்டையாதீனம் சார்பிலே போடப்பட்ட மூன்று மாலைகள், முப்பது பக்கவாத்தியக்கைதட்டலுக்கு ("அப்பளாஸ்" என்று வாசிக்கவேணுமாம்) மத்தியிலே மொட்டை-அ நண்பர் ஆதீனத்தண்ணீர்ப்பந்தலிலே வெளியிட (தண்ணீர்ப்பந்தாவிலே என்று வாசிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்), மொட்டை-ஆ நண்பர் முகவுரை எழுத, மொட்டை-இ நண்பர் பதிப்பாசிரியராக இருக்க, மொட்டை-ஈ, உ & ஊ நண்பர்கள் தங்கள் தொழிலான பத்திரிகைப்பத்தி வலைப்பாத்தி வாழைப்பொத்தி வடாம்புழியும் எழுத்துக்குப் பருப்புக் காய்ச்ச, அவல் பினைய எடுத்துக்கொள்ள நாற்பது பக்கக் கவிதைத்தொகுப்போ அல்லது எட்டுக்கதைக்கோர்வையோ, குறைந்த பட்சம் ( அதிக பட்சமென்றுதான் சொல்லவேண்டுமென்பது எழுதாமறை ) நான்கு புத்தகங்கள் புக்கி அறுத்து அள்ளிப்போட்டு வரலாற்றைப் புனைகதை ஆக்கிப் "பத்துநாட்களிலே நூற்றிப்பத்துப்பக்கமெழுதினேன்" என்றவிதத்திலே "வேலப்பன் வாலும் வடாமும்" என்ற தலைப்பிலே கட்டுடைக்கவிரும்பாக்கட்டுரையோ கதப்பொஸ்தகமோ வெளியிட்ட பிரபல எழுத்தாளர்கள் ( புதுமுக எடுத்தாளர்கள் என்று அரச அம்மணம் பேசுகின்ற சடையர்கள் எல்லோரும் நெத்தித்தலைப்பிலே "கூர்மைப்படுத்தப்பட்ட என்சடை எந்திரம்" என்றொட்டித் திரிகின்றவர்கள் என்பதைப் பின்னால், மொட்டை- எ_ஒன் இன் கட்டுரை சொல்லும் ) ஒற்றைப்பூப்படமோ, பெட்டைப்பிள்ளைகள் இரட்டைச்சடை பற்றி குட்டைக்கவியோ எழுதுவதில்லை என்பதை இத்தால் அறிக. [ "ஒற்றை வசனத்தை ஒற்றைப் பந்தியாக எழுதவேண்டுமா?" என்று கேட்டால், விசர்ச்சடையனின் தமிழ் பற்றிமட்டுமே விசனம் தெரிவிப்பவர்களைப் பழிவாங்க வைரத்தினை வைரத்தால் அறுக்கும் இந்த வழி தவிர வேறு வழியில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளும் நிலையிலே விசர்ச்சடையன் இருக்கிறான்" ]
இப்படியான அகப்புறச்சூழ்நிலையிலே பூனைபெயரிலே எழுத்துணியாமல் புனாபெயரிலே வசைபாடத்துணியாமல், புனைபெயரிலே சடையன் ஏன் எழுதுகின்றானென்பதைச் சொல்வது மிக அவசியம்.
Posted at 10:58 pm by Pay A Reeli
 |  |  |
.:dYNo:. August 6, 2005 07:33 AM PDT
அய்யே -/பெ, அப்ப அதுநீரில்லையா... இனிமேலக்கி பின்னூட்டறதுக்கு மின்னாடி போன்ல கேட்டுறணும்போல! மசுருமட்டைன்னு படிச்சப்மே ரோசிச்சேம், ஆத்தா இப்பிடி எழுதாதேன்னு... இப்ப என்ன பிரியோசனம்!
சரி வந்தது வந்தீரு அந்த ஈக்குவேஷன சால்வ் பண்ணீட்டு போயிடுவே!
.:டைனோ:. |
 |

 |  |  |
-/peyarili. August 6, 2005 04:46 AM PDT
ஒரு மதியமும் மாலையும் இரவும் இந்தப்பக்கம் வராவிட்டால், இத்தனை கூத்து இங்கேயா?
என் புனைபெயரிலும் பதுங்கிப் பதுங்கிப் பூனையோடடுகிறதா? :-(
-/அசல் ஒரிஜினல் மெய்யான விசர்ச்சடையன். |
 |

 |  |  |
.:dYNo:. August 5, 2005 05:28 PM PDT
>>>>அது நீதி; முறை; கரெக்டு;
எலே விசரு... அங்கன மொட்டதலக்கும் முழங்கால்சடைக்கும் முடிச்சு வாராப்புல எழுதிபுட்டு இங்கன வந்து நாட்டாம கணக்கா தீர்ப்பாலெ வாசிக்கே. அ ஆ உ ஊ ன்னு எண்ணிக்க வச்சி எழுதிபுட்டு கோயிஞ்சாமி மெம்பர் ப்ளாக்குல நோட்டீஸ¤ம் ஒட்டிப்புட்டு அவாஇவாலில்லன்னு பல்டி, குட்டி/தோப்புக்கரணம் போட்டா நம்பிடுவோம்ல? உம்ம எண்ணிக்கய வெச்சே நேத்து ப்ளாக்கத்தொடங்குண ஈகோமேனியாக்குஞ்சுகளுக்குக்கூட தெரியும்வே இன்னைக்கு நேத்திக்கு ட்ராயர் மாட்டுன சடையெல்லாம் நாளன்னைக்கு பேண்டு வேட்டி மாட்டற மொட்ட ஆகிடுமுன்னு! அதத்தானெவே பூடகமா சொல்றீரு!
>>>>ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்....
ஆருக்கு ஆரு கபர்தார்? மலையேறுவே சர்தாரு!
.:டைனோ:. |
 |

 |  |  |
visarsadayan August 5, 2005 03:24 PM PDT
/ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்..../
அது நீதி; முறை; கரெக்டு; ப்ளிண்ட்ஸ்டோன் ஏஜு டைனோவுக்கு எடுத்துச்சொல்லுங்க ஸாமி. மொட்டை வழி வேறே; சடையர் வழி வேறேன்னு சுத்தமா சொல்லுங்க சாமி |
 |

 |  |  |
goinchami-8A August 5, 2005 01:45 PM PDT
==========
மொட்டை => கோயிஞ்சாமியா? அவிங்க உம் பிறண்ட்ஸ் ஆச்சே?
.:டைனோ:.
==============
ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்.... |
 |

 |  |  |
goinchami-8A August 5, 2005 01:41 PM PDT
ஆத்தா....... வேணாம்.... மலையேறு....டயம் செரியில்ல..... |
 |

 |  |  |
visarsadayan August 5, 2005 11:22 AM PDT
பொய்யி சூது செய்ய அய்யோன்னு போவான்னு அந்த அய்யரு சொன்னது இந்த மயிரைத்தானாக்குமுன்னா நம்பவா போறீரு? இப்புடியாக நீரும் மொட்டை கச்சிக்குட்டைக்குள்ளே அயிக்கியமான அயிரமீனு ஆயி ஊஸி பாஸீ பாலிஸி விக்குறவரு ஆயிட்டீரே ஸாமி!! :-(
கோயிஞ்சாமியா? யோவ் ட்டைனோவ்... விசர்ச்சடையன் சூப்பூ என்னிக்கோ டாட்டா காட்டின மூப்பூ; கோயிஞ்சாமி ட்ரூப்பூ இன்னிக்கு நேத்திக்கு ட்ராயர் மாட்டிக்கின்ன நாராயண்ஸாமி க்ரூப்பூ... இத எயுதுற காலத்துல கோயிஞ்சாமியேது? கோயிலேது? குளமேது? குட்டையேது? லேது? நீரு செப்புண்டி ட்டைனோவ் ப்பாப்பூ... |
 |

 |  |  |
.:dYNo:. August 5, 2005 10:56 AM PDT
ஆத்தா -/பெயரிலி... கிளம்பீட்டயே கிளம்பீட்ட!
அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் சொறிந்தும் சொறியாமலும் மறுபடியும் எழுத ஆரம் பிச்சுட்டையே! காயகல்பம் மாட்டு எச்சீ எல்லாம் போட்டு மண்டையில வருசத்துல நாலு முடி வளத்து வச்சேன். இன்னிக்கு கார்த்திக்ராமாஸ் புண்ணியத்துல அதுவும் போச்சு!
மொட்டை => கோயிஞ்சாமியா? அவிங்க உம் பிறண்ட்ஸ் ஆச்சே?
.:டைனோ:. |
 |

 |  |  |
visarsadayan August 5, 2005 09:53 AM PDT
mEthiyum ezhuthi mudingja pinnAl |
 |
